தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சமுதாய விழிப்புணர்வு நாடகங்களில் நடித்த சிறுவர், சிறுமியர்களை வாழ்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவு: தந்தை பெரியார் பெயரல்ல; கருத்தியல்! தலைமுறைகள் கடந்து மானுடச் சமுதாயம் பகுத்தறிவோடும் சுயமரியாதையோடும் வாழ்வதற்கான வழிகாட்டி! கொள்கை உரத்தோடு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் பெரியார் பிஞ்சுகளை வாழ்த்தி மகிழ்ந்தேன். இது பெரியார் மண்! கலைக்கு இடமுண்டு; களைகளுக்கு அல்ல. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
0 Comments