பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத குடும்ப அட்டைதாரா்கள் நியாய விலைக் கடைகளில் திங்கள்கிழமை (ஜன. 17) முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு, சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவரும் வருகிற திங்கள்கிழமை (ஜன. 18) காலை 7 மணி முதல் அனைத்து நியாய விலைக் கடைகளில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் பரிசுத் தொகுப்பு வர வேண்டிய நிலுவையுள்ள நியாய விலைக் கடைகளுக்கு பொருள்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படும். அன்றைய தினம் பொது மக்களுக்கு பொருள்கள் வழங்கப்படாது. நியாய விலைக் கடைகளை மட்டும் திறந்து கூட்டுறவு சங்கங்களின் மூலமாக பொருள்களைப் பெற்று இறக்கி வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
0 Comments