காய்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தி வருகிற நிலையிலும் தொற்றுப் பரவலின் தீவிரத்தால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் ஏற்கனவே கரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தும் அறிகுறி இல்லாதவர்கள் பரிசோதனை செய்ய தேவை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், கர்ப்பிணி பெண்கள் , நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments