சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்துள்ளது. இதன்மூலம், ஒரு சவரன் ரூ.1,14,640க்கு விற்பனையாகியது.
சர்வதேச சந்தை நிலவரங்களைப் பொறுத்து தங்கம் மற்றும் வெள்ளி நிலையில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இந்தியாவில் கச்சா எண்ணெய்யைப் போலவே, அதிகம் இறக்குமதி செய்யும் பொருளாக தங்கம் இருக்கிறது. தங்கமும், கச்சா எண்ணெயும் சேர்ந்து டாலர் தேவையை அதிகரித்து ரூபாய் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே பிரதமர் மோடி, தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். இதன் காரணமாக, தங்க நகை விற்பனை நிறுவனங்களின் பங்குகள் சரியத் துவங்கியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்துள்ளது. இதன்மூலம், ஒரு சவரன் ரூ.1,14,640க்கு விற்பனையாகியது. அதேபோல, ஒரு கிராம், ரூ.230 அதிகரித்து ரூ.14,330ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் ஒரு கிராம் ரூ.15 அதிகரித்து ரூ.300க்குக்கும், கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் உயர்ந்து ரூ.3 லட்சமாகவும் விற்பனையாகி வருகிறது.

0 Comments