Ad Code

Responsive Advertisement

அறநிலையத்துறை அமைச்சரிடம் ரூ.4000 லஞ்சம் வசூலித்த அர்ச்சகர் - திருச்செந்தூரில் அதிர்ச்சி




திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக அமைச்சர் ரமேஷ் மற்றும் அவரது உதவியாளரிடம் ரூ.4 ஆயிரம் பெற்ற அர்ச்சகர், அவர்களின் உண்மையான அடையாளம் தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.


தமிழக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ரமேஷ் பல்வேறு கோவில்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சில தினங்களுக்கு முன் திருச்சி கோவிலில் ஆய்வு செய்த பிரசாதங்களில் காலாவதி தேதி குறிப்பிடவில்லை என்பதை கண்டறிந்தார். தமிழகம் முழுவதும் உள்ள கோவில் பிரசாதங்களில் காலாவதி தேதி கட்டாயம் என்ற உத்தரவை பிறப்பித்தார்.


அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று ஆய்விற்காக சென்றுள்ளார். அவர் அமைச்சர் பொறுப்பு வகிப்பது தெரியாத வகையில் தனது உதவியாளருடன் சாதாரண மனிதர் போல் சென்று இருக்கிறார். கோவில் வளாகத்திற்கு வந்து சுற்றிப்பார்த்துள்ளார்.


அப்போது கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கட்டணம் எவ்வளவு? என அங்கு இருந்த அர்ச்சகர்களிடம் அமைச்சர் ரமேஷ், அவரது உதவியாளர் கேட்டு இருக்கின்றனர். இதற்கு அர்ச்சகர் ஒரு ஆளுக்கு 2 ஆயிரம் ரூபாய், இரண்டு பேருக்கு 4 ஆயிரம் ரூபாய் தாருங்கள் என்று கேட்டு இருக்கிறார். அந்த அர்ச்சகரிடம் அமைச்சர் உதவியாளர் பணம் இல்லை, ஜிபேயில் தான் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். உடனே அர்ச்சகர் தனது ஜிபே நம்பரை சொல்லி ரூ.4 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டார்.


பிறகு அமைச்சர் ரமேஷ் மற்றும் அவரது உதவியாளரிடம் ரூ.4 ஆயிரம் பெற்ற அர்ச்சகர், அவர்களின் உண்மையான அடையாளம் தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.


இதனை தொடர்ந்து அன்னதான கூடத்தில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தபோது, அதிகாரிகளிடம் அர்ச்சகர்கள் தரிசனத்திற்கு பணம் வாங்குவது குறித்து கடும் கோபத்துடன் கேள்விகளை எழுப்பி உள்ளார். தொடர்ந்து முடி காணிக்கை செலுத்தும் இடம் உள்ளிட்ட கோவில் வளாகத்தில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement