Ad Code

Responsive Advertisement

தமிழ்நாட்டில் 13 இடங்களில் வெயில் சதம்




தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. கத்திரி வெயில் ஆரம்பிக்கும் முன்பே வெயில் கொளுத்துகிறது. இன்று மட்டும் 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அதன்படி, அதிகபட்சமாக வேலூரில் 107.4 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு வெயில் வாட்டியது. ஈரோடு 106.2, கரூர் பரமத்தி 105.8, திருச்சி 105.6 , திருத்தணி 103.6, திருப்பத்தூர் 103.5; நாமக்கல் 102.6, மதுரை விமான நிலையம் 102.6, சென்னை மீனம்பாக்கம் 102.2, மதுரை நகரம் 101.1 , நாகை 100.9, தருமபுரி 100.8, சேலம் 100.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement