Ad Code

Responsive Advertisement

தமிழகத்தில் புது வீடு கட்டுபவர்களுக்கு குட் நியூஸ்! ரூ.3.50 லட்சம் பெறலாம் - முழு விவரம்

 




மிழ்நாட்டில் புதிய வீடு கட்ட திட்டமிட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. கலைஞர் கனவு இல்ல திட்டத்துக்கு அரசு 3500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ள தமிழ்நாடு அரசு, ஒரு லட்சம் வீடுகள் புதிதாக கட்டப்படும் என கூறியுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். அவர்கள் இத்திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டிக் கொள்வதுடன் 3.50 லட்சம் ரூபாய் வரை நிதியுதவியும் பெற்றுக் கொள்ளலாம். எனவே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி, தேவையான ஆவணங்கள் என்ன?, பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்? என்பது குறித்த முழு அப்டேட்டுகளையும் இங்கே பார்க்கலாம். 


கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் நோக்கம்

தமிழகத்தில் இன்னும் குடிசை வீடுகளில் வசித்து வரும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நிரந்தரமான கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தருவதே இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும். 2030-ஆம் ஆண்டிற்குள் "குடிசைகள் இல்லாத தமிழ்நாடு" என்ற இலக்கை அடைய இத்திட்டம் வழிவகை செய்கிறது. 


கலைஞர் கனவு இல்ல திட்டம் - 3500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

கலைஞர் கனவு இல்ல திட்டத்துக்கு  3500 கோடி  ரூபாய் ஒதுக்கிய அரசாணையை தமிழ்நாடு அரசு இப்போது வெளியிட்டுள்ளது. 3500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ஏற்கனவே 2 லட்சம் வீடுகள் உருவாகி வரும் நிலையில், மேலும் ஒரு லட்சம் வீடுகள் 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என அரசு அறிவித்துள்ளது.


மாவட்ட வாரியாக வீடுகள் ஒதுக்கீடு

அதன்படி, மாவட்டம், ஊராட்சி வாரியாக பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு லட்சம் வீடுகளும் ஒரே தவணையில் கட்டப்படாது. பகுதி பகுதியாக இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், இது குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும். அப்போது தகுதியானவர்கள் இத்திட்டத்தின் கீழ் வீடு  கட்ட விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் பரிசீலனை செய்து தகுதியான பயனாளிகள் கலைஞர் கனவு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள தேர்வு செய்யப்படுவார்கள். எனவே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி, தேவையான ஆவணங்கள் என்ன? என்பதை இங்கே பார்க்கலாம்.


விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

வீடு கட்டப்பட இருக்கும் இடத்தின் பத்திரம் நகல், ரேஷன் அட்டை,  பட்டா மற்றும் சிட்டா, ஆதார் அட்டை, தொலைபேசி நம்பர், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வங்கி கணக்கு விவரம், வருமானச் சான்றிதழ், முகவரிக்கான ஆவணம்.


கலைஞர் கனவு இல்ல திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?

1. குடிசையில் வசிப்பவர்கள் இத்திட்டத்தின்கீழ் வீடு வழங்கிடக் கோரி விண்ணப்பிக்கலாம்.


2. சொந்தமாக பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட தகுதியானவர்கள். 


3. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டுவதற்கு குறைந்தபட்சம் 360 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.


4. ஒவ்வொரு வீட்டிற்கும் அலகுத் தொகை ரூ.3,50.000/- (ரூபாய் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) கொடுக்கப்படும். 


5. இந்த தொகையானது, மூன்று நிலைகளில் ஒற்றை சாரள கணக்கு மூலம் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக தொகை வரவு வைக்கப்படும்.


யாருக்கு வீடு கிடைக்காது?

சொந்தமாக கான்கிரீட் வீடு வைத்திருப்பவர்கள் தகுதியற்றவர்கள். குடிசையில் ஒருபகுதி கான்கீரிட், ஓடு, ஆஸ்பெட்டாஸ் சீட்டு இருந்தால் தகுதி பெறமுடியாது. புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டிருப்பவர்கள் இதில் வீடு கட்ட முடியாது. 


பயனாளிகள் தேர்வு

கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுபவர்களை ஊராட்சி மன்ற தலைவர் அடங்கிய குழுவினரே தேர்வு செய்வார்கள். இத்திட்டத்துக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே விண்ணப்பிக்க வேண்டும். வரும் மொத்த விண்ணப்பங்களின் அடிப்படையில், இக்குழு தகுதியானவர்களை தேர்வு செய்யும். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தால், குழுவினர் முன்னுரிமை அடிப்படையில் வீடுகளை கட்டிக்கொள்ள ஒதுக்கீடு செய்வார்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால், விண்ணப்பித்தவர்களின் விபரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் கிராம சபையின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே கலைஞர் கனவு இல்ல திட்டத்துக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.


பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுபவர்களுக்கு தேவையான சிமெண்ட், அரசு நிறுவனமான TANCEM வழியாகவே விநியோகம் செய்யப்படும். ஏனென்றால், பயனாளிகளின் நிதிச்சுமையை குறைக்கும் பொருட்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுதவிர இரும்பு கம்பிகளும் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், ஊராட்சி மன்ற அலுவலகத்தை நாடவும்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement