Google 67 Search Trend | தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு புதிய ட்ரிக் தான் '67'. இது வெறும் எண் மட்டும் கிடையாது.
கூகுள் சர்ச் இன்ஜின் (Google Search Engine) நம் அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. நமக்குத் தெரியாத தகவல்களைத் தேடுவது முதல் பொழுதுபோக்கு வரை அனைத்திற்கும் தற்போது கூகுளையே நம்பியுள்ளோம். ஆனால், கூகுள் வெறும் தேடுவதற்கு மட்டுமான தளம் கிடையாது.
அவ்வப்போது பயனர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் பல சுவாரஸ்யமான அம்சங்களை (Easter Eggs) அறிமுகப்படுத்துவது வழக்கம். அதன்படி, தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு புதிய ட்ரிக் தான் '67'. இது வெறும் எண் மட்டும் கிடையாது. நீங்கள் கூகுளில் இந்த நம்பரை தேடினால் உங்கள் திரையில் ஒரு மேஜிக் நிகழும். இந்த டிரெண்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் இந்த புதிய ட்ரிக்கை தங்கள் மொபைல் அல்லது லேப்டாப்பில் செய்து பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.
'67' என்று தேடினால் என்ன நடக்கும்?
தினந்தோறும் கூகுள் தனது Doodle எனும் முகப்பு பக்கத்தை நிகழ்வுகளுக்கு ஏற்ப மாற்றி வருகிறது. குறிப்பிட்ட நாளில் நடக்கும் நிகழ்வுகள் அல்லது ஏற்கனவே நடந்து முடிந்த நிகழ்வின் அடிப்படையில் இந்த டூடூல் வடிவமைக்கப்பட்டு இடம்பெறுகிறது. இந்த நிலையில் தான் தற்போது '67' என்ற சர்ப்ரைஸை கூகுள் வழங்கி இருக்கிறது.
அதாவது செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றில் கூகுளை திறந்து 67 அல்லது 6-7 என டைப் செய்து என்டர் செய்தால் போதும். சில விநாடிகளில் உங்களின் செல்போன் மற்றும் லேப்டாப் ஸ்கிரீன் சற்று 'ஷேக்' ஆகும். இதனை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். மேலும், செல்போன் அல்லது லேப்டாப்பில் பிரச்சனை என்று நினைக்க வேண்டாம். இது தனது வாடிக்கையாளர்களுக்கு கூகுள் தந்துள்ள 'சர்ப்ரைஸ்' மட்டுமே. இதனால் உங்களின் செல்போன் மற்றும் லேப்டாப்பிற்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
'டூ எ பேரல் ரோல்' (Do a Barrel Roll) என்றால் என்ன?
இதுபோலவே கூகுளில் மற்றொரு பிரபலமான ட்ரிக் ஏற்கனவே உள்ளது. அதன்படி, கூகுளில் "Do a barrel roll" என்று டைப் செய்தால், உங்கள் திரை முழுவதுமாக 360 டிகிரி சுழன்று பழைய நிலைக்கு வரும். அல்லது "z or r twice" என்று Type செய்தாலும் உங்கள் திரை முழுவதுமாக 360 டிகிரி சுழன்று பழைய நிலைக்கு வரும். பார்ப்பதற்கு ஏதோ தொழில்நுட்பக் கோளாறு போல தோன்றினாலும், இதுவும் கூகுளின் பிரபலமான மற்றும் சுவாரஸ்யமான 'ஈஸ்டர் எக்' (Easter Egg) அம்சங்களில் ஒன்றாக உள்ளது.

0 Comments