டி-சர்ட் என்பது தற்போது பொதுவானதாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் ஆண்கள் முதல் பெண்கள் வரை தற்போது அனைவரும் டி-சர்ட் அணிகிறார்கள். இது அணிவதற்கு எளிதாகவும் இலகுவாகவும் இருப்பதால் மக்கள் இதை அதிகம் விரும்புகிறார்கள் என்றே சொல்லலாம். ஆனால், நாம் தினமும் அணியும் இந்த டி-சர்ட்டில் உள்ள 'டி' என்பதற்கு என்ன அர்த்தம் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
பொதுவாக, சட்டை (Shirt) என்றால் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதற்கு முன்னால் உள்ள 'டி' (T) என்பதற்கு அர்த்தம் என்ன என்பது பலருக்கும் தெரியாது. இதற்கு பின்னால் இரண்டு சுவாரஸ்யமான கதைகள் உள்ளன. அது குறித்து தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஃபேஷன் நிபுணர்களின் கூற்றுப்படி, டி-சர்ட் தயாரிப்பது மிகவும் எளிது. இதற்கு காலர் கிடையாது. இது நேரான ஸ்லீவ்கள் மற்றும் உடல் அமைப்புக்கு ஏற்றவாறு நேராக இருக்கும். முன் அல்லது பின் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது, 'T' என்ற எழுத்தை போல தெரியும். அதனால் தான், இதற்கு 'T-Shirt' என்று பெயர் வந்ததாக ஃபேஷன் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மறுபுறம், பிரிட்டிஷ் செய்தித்தாள் தி சன் (The Sun) வழங்கிய தகவலின்படி, முதலாம் உலகப்போரின்போது, அமெரிக்க வீரர்கள் பயிற்சி நேரத்தில் லேசான மற்றும் வசதியான சட்டைகளை அணிந்தனர். அப்போது, இவை 'ட்ரைனிங் சர்ட்' (Training Shirts) என்று அழைக்கப்பட்டுள்ளது. இவையே, காலப்போக்கில் டி-சர்ட் என்று சுருக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நம் வசதிக்காக அணியும் இந்த டி-சர்ட் பின்னால், இப்படி ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது என்று தெரிந்தவுடன் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதேபோல், நாம் அணியும் ஒவ்வொரு ஆடைகளுக்கு பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

0 Comments