Ad Code

Responsive Advertisement

Coldrif இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 




ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் 12 குழந்தைகள் பலியானதைத் தொடர்ந்து, 6 மாநிலங்களில் உள்ள கோல்ட்ரிப் இருமல் மருந்து உற்பத்தி மையங்களில் ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் (சிடிஎஸ்சிஓ) ஆய்வு நடவடிக்கையை தொடங்கி இருக்கிறது. மபி, தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் கோல்ட்ரிப் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்த 12 குழந்தைகள் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மருந்தை குடித்த 1400 குழந்தைகள் ராஜஸ்தானில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். குழந்தைகள் பலியானதை தொடர்ந்து 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் இருமல் மருந்து வழங்க ஒன்றிய அரசு தடை விதித்தது.


மேலும், மபி அரசின் கோரிக்கையை அடுத்து, தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோல்ட்ரிப் இருமல் மருந்து உற்பத்தி மையத்தில் மருந்தின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன. இதில், அந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் ‘டை எத்திலீன் கிளைக்கால்’ எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.




 காஞ்சிபுரம் மாவட்டத்தில் தயாரான இருமல் மருந்தை சாப்பிட்ட குழந்தைகள் வடமாநிலத்தில் உயிரிழந்துள்ளதால், அதுகுறித்து மருந்து கட்டுப்பாட்டு அலுவலரிடம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் தற்போது விசாரணை செய்து வருகிறார். விசாரணை முடிந்த பின்னர் விரிவான தகவல் தெரிவிக்கப்படும்.


தமிழ்நாட்டில் அந்த வகை இருமல் மருந்து விற்பனையாகி வருகிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். காலாவதியான மருந்தை உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்கிற ரீதியிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement