தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். தீபாவளி பண்டிகை என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது பட்டாசுகள் ஆகும். தீபாவளி பண்டிகை காரணமாக பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
2 மணி நேரம் மட்டுமே அனுமதி:
இந்த சூழலில், தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதாவது, தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தீபாவளி பண்டிகைக்காக காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் உள்ள பட்டாசுகளை மட்டும் பயன்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.
தீபாவளி கொண்டாட்டம்:
தீபாவளி பண்டிகைக்கான கொண்டாட்டம் தற்போது முதல் களைகட்டத் தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. ஆனால், சுற்றுச்சூழல் மாசு, ஒலி மாசு உள்ளிட்ட பலவற்றை அதிக சத்தம், அதிக மருந்துகள் கொண்ட பட்டாசுகள் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனால், பட்டாசு வெடிப்பதற்கு தமிழக அரசு தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதன் எதிரொலியாகவே, கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பட்டாசுகள் வெடிக்க தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
விதிகளை மீறினால்?
இந்த விதிகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, அபராதம், கைது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் மக்கள்தொகை அதிகம் என்பதால் அங்கு ஒலி மாசும், காற்று மாசும் தீபாவளி காரணமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் இதனால் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாகவே தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்பட்டு வந்தாலும், பட்டாசுகள் விற்பனை படுஜோராகவே நடந்து வருகிறது. பட்டாசு விற்பனை செய்ய தமிழ்நாடு முழுவதும் சுமார் 6 ஆயிரம் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பட்டாசு கடைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் பட்டாசு விற்பனை சில இடங்களில் தேங்கியுள்ளது. சிவகாசியில் இருந்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கும் பட்டாசுகள் தீவிரமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பசுமை பட்டாசு
தீபாவளி பண்டிகை காரணமாக சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் பசுமை பட்டாசுகளையே பெரும்பாலான நிறுவனங்கள் தயாரித்து வருகின்றனர். குறிப்பாக, பகலில் வெடிக்கும் பட்டாசுகளை காட்டிலும் இரவில் வெடிக்கும் பட்டாசுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தைகள், பெண்கள் என குடும்பத்துடன் வெடிக்கும் வகையில் இரவு நேர பட்டாசு தயாரிப்புகளை பட்டாசு ஆலைகள் அதிகரித்துள்ளது.

0 Comments