Ad Code

Responsive Advertisement

இளநீர் குடிப்பது சிறந்ததா அல்லது பிரஷ் ஜூஸ் சிறந்ததா..?

 




ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பானங்கள் என்று வரும் போது, பழச்சாறுகள் முதல் இடத்தில் இருக்கும்.

அதே போல, இளநீரும் கனிமச் சத்து நிறைந்த பானங்களில் ஒன்றாகும். ஆனால், ஆரோக்கியமான பானம் என்று வரும் போது, பழச்சாறு, அதிலும் ஃபிரெஷ்ஷான பழங்களில் இருந்து பெறப்பட்ட ஜூஸ் சிறந்ததா அல்லது இளநீர் சிறந்ததா என்ற கம்பேரிசன் இருந்து வருகிறது. சிலருக்கு இளநீர் குடிப்பதால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். அதே போல, சிலர் பழச்சாறு குடிக்க முடியாது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.



ஊட்டச்சத்து


உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்கள் மட்டுமல்லாமல், இளநீர் பல வித நன்மைகளை அளிக்கிறது. இது உடலுக்கு ஊட்டமளிக்கிறது, சருமத்தில் ஏற்படும் ரேஷஸ்களுக்கு தீர்வாக அமைகிறது மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக, இளநீரில் எலக்ட்ரோலைட் இருப்பது நீரிழப்பை தடுக்க உதவுகிறது.



பழச்சாறுகளில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்சிடண்ட்டுகள் நிறைந்து இருக்கும். அதே போல, சில பழங்களில் மினரல்கள் நிறைந்திருக்கும். இது அடிப்படை ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.



கலோரிகள்



அதிக கலோரி கொண்ட பானம் என்று வரும் போது, ஃபிரெஷ் ஜூஸ்களை விட இளநீரில் கலோரிகள் குறைவு. பெரும்பாலான பழச்சாறுகளை விட, இளநீரில் 60% குறைவான கலோரிகள் உள்ளது. உதாரணமாக, 100 கிராம் ஆப்பிள் ஜூஸில், தோராயமாக 46 கலோரிகள் இருக்கிறது; அதே நேரத்தில் 100 கிராம் இளநீரில் 18.4 கலோரிகள் உள்ளன. எனவே, கலோரி குறைவான ஆரோக்கிய பானம் என்று வரும் போது, இளநீர் சிறந்த பானமாகும்.



சர்க்கரை அளவு


அதிக சர்க்கரை கொண்ட பானங்கள் என்று வரும் போது, மேலே கூறியது போலவே பழச்சாறை விட இளநீர் சிறந்த தேர்வாகும். குறிப்பாக, இனிப்பான பழங்களில் இருந்து பெறப்படும் ஜூஸில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். மேலும், பழச்சாறுகளில் சுவைக்காக கூடுதலாக சர்க்கரை அல்லது இனிப்புகள் சேர்க்கப்படுவதால், அதிக சர்க்கரை கொண்ட பானமாக மாறும். இது உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் போன்றவர்களுக்கு ஏற்றதல்ல. இளநீரில் இயல்பாகவே குறைவான அளவு சர்க்கரையே உள்ளது. எனவே, இது சர்க்கரை அளவு அதிகப்படுத்தாது.



நார்ச்சத்தா அல்லது எலக்ட்ரோலைட்டா



பழச்சாறில் இருக்கும் சில சத்துக்கள், இளநீரில் இருக்காது. உதாரணமாக, பழச்சாறில் அதிக நார்ச்சத்து இருக்கிறது, எனவே செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதே போல, இளநீரில் எலக்ட்ரோலைட் அதிகமாக உள்ளது. இது உடலில் நீர்ச்சத்து குறையாமல் வைத்திருக்கும். குறிப்பாக, கோடை காலம், வயிறு சார்ந்த பிரச்சனைகள் அல்லது கர்ப்ப காலத்தில் ப்மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.




எப்போது இளநீர் குடிக்கலாம்

உடலில் ஹைட்ரேஷனை அதிகப்படுத்தவும், நீர்ச்சத்து குறைபாடாமல் ஏற்படாமல் இருக்கவும் இளநீர் குடிக்கலாம்.



அல்சர் மற்றும் குமட்டலுக்கு நல்ல நிவாரணமாக இருக்கும்



செரிமான கோளாறு இருப்பவர்கள், வயிற்றுப் புண்களை சரி செய்ய, ph லெவல்களை பேலன்ஸ் செய்ய இளநீர் குடிக்கலாம்.




எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு, லோ-கலோரி உணவுகளில் ஒன்றாக இளநீரை குடிக்கலாம்.


கர்ப்ப காலத்தில் பெண்கள் உடலுக்குத் தேவையான சத்துக்களைப் பெற இளநீர் குடிக்கலாம்.


கிட்னியில் கற்கள் உருவாகாமல் இருக்க இளநீர் குடிக்கலாம்.



வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் கூடுதல் பலன்கள் பெறலாம்.


எப்போது பழச்சாறு குடிக்கலாம்

சுவையான ஜூஸ்களை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால், பின்வரும் சூழலில் குடிப்பது அதில் இருந்து நன்மைகளை அளிக்கும்.


உடல் பலவீனமாக இருக்கும் போது, தேவையான சத்துக்களை பெறுவதற்கு பழச்சாறுகள் மிகச்சிறந்த பானமாகும்.


அதிக வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து கொண்ட பழச்சாறுகள் ரத்த சோகைக்கு சிறந்த தீர்வாகும்.


வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் நிறைந்த பழச்சாறு, சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கும்.


வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை பூக்கும்.


வெறும் வயிற்றில் பழச்சாறு குடிக்கக் கூடாது, அசிடிட்டியை ஏற்படுத்தும்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement