தமிழ்நாடு அரசு சார்பில் இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும்.
சங்கத்தமிழ் பாடல்களை இசையமைத்து ஒரு ஆல்பம் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
இசைஞானி இளையராஜாவுக்கு அரசு சார்பில் இன்று பாராட்டு விழா நடைபெறறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இளையராஜா கலைத்தாய்க்கு மட்டும் சொந்தமல்ல, நம் அனைவருக்கும் சொந்தமானவர். அதனால் தான் அவருக்கு நாம் பாராட்டுவிழா நடத்திக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாடு அரசு சார்பில் இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும்.
சங்கத்தமிழ் பாடல்களை இசையமைத்து ஒரு ஆல்பம் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
இளையராஜாவுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இசைஞானி இளையராஜாவுக்கு அவரது சிலையையே நினைவு பரிசாக வழங்கி கவுரவித்தார்.

0 Comments