40 வயதிற்கு மேற்பட்டவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டிய சில விஷயங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்க உள்ளோம்.
பொதுவாக 40 வயதிற்கு பிறகு நம்முடைய உடல் பலவித மாற்றங்களை எதிர்கொள்கிறது. இதன் காரணமாக வயதாவதால் ஏற்படக்கூடிய விளைவுகளை குறைக்கவும் நம்முடைய ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும் உதவக்கூடிய ஆரோக்கிய பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டிய சில விஷயங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்க உள்ளோம்.
உடற்பயிற்சி செய்வதை, சுறுசுறுப்பாக செயல்படுவதை குறைப்பது :
நம்முடைய உடலின் தசைகள், எலும்புகள் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி மிகவும் உதவியாக இருக்கிறது. உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் உடல் எடை அதிகரித்து நெகிழ்வுத்தன்மை குறைந்து போகும். இதன் காரணமாக நாள்பட்ட நோய்கள் வரும் ஆபத்து அதிகரிக்கிறது.
உடலை பலப்படுத்தும் பயிற்சிகளை நிறுத்துவது :
வயதாவதால் ஏற்படக்கூடிய தடையிழப்பை சரி செய்ய இந்த வகையான வொர்க்கவுட் மிகவும் அவசியமாகும். உடலை வலுப்படுத்தும் பயிற்சி இல்லையென்றால், உடலில் சமநிலை தவறி கீழே விழக்கூடிய ஆபத்து அதிகரிக்கும். ஆகவே தசைகளின் சக்தியை பராமரிக்கவும் அதிகரிக்கவும் எலும்பு ஆரோக்கியத்தை பலமாக வைத்திருக்கவும் ரெசிஸ்டன்ஸ் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
போதுமான தூக்கம் இல்லாமை :
உடலை மீட்டெடுக்கவும், அறிவாற்றலுக்கும், ஆரோக்கியத்திற்கும் தூக்கம் அவசியமாகும். போதுமான தூக்கம் இல்லையென்றால் மன அழுத்தம் அதிகமாவதோடு உடல் எடையும் அதிகரிக்கும். மேலும் மனரீதியாகவும் நமது செயல்திறன் குறைந்து போகும். தினமும் இரவு ஏழு முதல் ஒன்பது மணி நேரம் நன்றாக தூங்குங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக நாடுவது :
பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உடல் எடை, ஹைபர் டென்சன் அதிகரிப்பதோடு மற்ற உடல் நலப் பிரச்சனைகளையும் வரவழைக்கும். முழுமையான ஊட்டச்சத்து நிறைந்த டயட்டைப் பின்பற்றுங்கள். பழங்கள், காய்கறிகள், லீன் புரொட்டீன், முழு தானியங்கள் ஆகியவற்றை டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் ஆற்றல் அளவையும் மேம்படுத்த முடியும்.
மனநல ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமை :
உடற்பயிற்சி போலவே மனநல ஆரோக்கியமும் நம்முடைய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மன அழுத்தம் அதிகரித்தால் வயதாகும் போது பல சிரமங்களை சந்திக்க நேரிடும்.
புகையிலை பழக்கத்தை நிறுத்தாமல் இருப்பது :
இதய நோய், புற்றுநோய், சுவாசப் பிரச்சனைகள் உள்ளிட்ட பல தீவிர நோய்களுக்கு புகையிலை காரணமாக இருக்கிறது. புகையிலை பழக்கத்தை நிறுத்தவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
உடல் பரிசோதனை செய்யாமல் இருப்பது :
வயது அதிகரிக்க அதிகரிக்க, அடிக்கடி உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதில் கவனம் செலுத்தாமல் இருந்தால் ஆரம்பத்திலேயே நோயை கண்டறி முடியாமல் போகும்.
போதுமான அளவு தண்ணீர் அருந்தாமை :
செரிமானம், ரத்த ஓட்டம், உடல் வெப்பநிலை பராமரிப்பு போன்ற பல செயல்பாடுகளுக்கு நீர்ச்சத்து அவசியமாகும். ஆகவே உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
மோசமான சமூக பிணைப்பு :
நம்முடைய மனமும் அறிவாற்றல் செயல்திறனும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் பலரோடும் நட்பு வளர்த்துக்கொள்ள வேண்டும். குறைவான சமூக நடவடிக்கைகள் மற்றும் எப்போதும் தனிமையிலேயே இருந்தால் நம்முடைய மனம் மறும் உடலின் ஆரோக்கியம் கெட்டுப்போகும்.
சரியாக அமராமல் இருப்பது :
நாம் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ நாற்காலியில் சரியான தோரணையில் அமரவில்லை என்றால் முதுகு வலி, மூட்டு வலி போன்ற பல பிரச்சனைகள் வரக்கூடும்.

0 Comments