Ad Code

Responsive Advertisement

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய தலைமைச் செயலாளர்: வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம்

 



நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, முன்னாள் தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா, தற்போதைய தலைமைச்செயலாளர் முருகானந்தம் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகி மன்னிப்பு கோரினர்.


தமிழக அரசின் முன்னாள் தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா, தற்போதைய தலைமைச்செயலாளர் முருகானந்தம் மீது கருணை அடிப்படையில் வேலை வழங்காதது தொடர்பான உத்தரவை அமல்படுத்தாதது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.


இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை இன்று நடந்தது. இதில் முன்னாள் தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா, தற்போதைய தலைமைச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்தனர்.


விசாரணையில்,இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதில் மகிழ்ச்சி இல்லை என்றும் மாறாக தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.


மன்னிப்பை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement