பல பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் உங்கள் இல்லம் தேடி வரவில்லை என்றாலோ, அல்லது அதிகாரிகள் உங்களிடம் நேரடியாக விண்ணப்பத்தை அளிக்கத் தவறினாலோ கவலைப்படத் தேவையில்லை. அதற்கு பதிலாக, சிறப்பு முகாம்கள் வாயிலாக விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம்கள்
நகர்ப்புறங்களில் இதற்கென 3,768 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கிராமப்புறங்களில் 6,232 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. எனவே, பொதுமக்கள் இந்த முகாம்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்
.விண்ணப்பம் செய்வதற்கு நவம்பர் 30 வரை கால அவகாசம் உள்ளது. எனவே, அவசரப்படாமல், பொறுமையாக இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களை முகாம்களில் பெற்றுக்கொள்ளலாம்.
யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கிடைக்காது?
இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 45 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி அக்டோபர் வரை இதற்கான முகாம்கள் நடைபெறும்.
இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விதிகள் மற்றும் விஷயங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். நேற்று வெளியிடப்பட்ட விதிகளின் மூலம் யாருக்கெல்லாம் பணம் கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளது.
இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், ஆதரவற்ற/கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் இத்திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
0 Comments