Ad Code

Responsive Advertisement

கோயில்களில் சினிமா பாடல்களை அனுமதிக்க கூடாது - உயர்நீதிமன்றம்

 



கோவில்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் பொழுது பக்திப் பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும், சினிமா பாடல்கள் பாட அனுமதிக்க கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம்


கோவில்களில் நடைபெறும் இசை கச்சேரியில் சினிமா பாடல்களை அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


புதுச்சேரி திருமலைராயன்பட்டினம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற இசை கச்சேரியில் சினிமா பாடல்கள் பாடப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, "கோவில்களில் இசை கச்சேரிகளில் பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும். கோவில் வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் சினிமா பாடல்களை பாட அனுமதிக்க கூடாது" என்று திட்டவட்டமாக கூறியது.


இதையடுத்து, கோவில்களில் சினிமா பாடல்கள் தவிர பிற பாடல்கள் பாடப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் கவனிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement