நாகை சிறப்பு பள்ளியில் படித்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
நாகூா் அருகேயுள்ள மேலவாஞ்சூரைச் சோ்ந்தவா் சஞ்சய்ராம் (17). இவா், நாகை தனியாா் கல்லூரி வளாகத்தில் செயல்படும் சிறப்பு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்த சிறப்பு பள்ளியில் படிக்கும் மாணவா்கள் காடம்பாடியில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனா்.
இந்நிலையில், மாணவா் சஞ்சய்ராம் பள்ளிக்கு சென்று விட்டு சக மாணவா்களுடன் விடுதிக்கு சென்றாா். அப்போது, மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரை சக மாணவா்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சஞ்சய்ராமை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து, நாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
0 Comments