தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு தேர்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.
அதிமுக ஆட்சியில் புதிதாக 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால் நடைபெற்ற வார்டு மற்றும் மறு சீரமைப்பு பணி காரணமாக அவை தவிர்த்து மற்ற இடங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு 2021ஆம் ஆண்டு நடைபெற்றது. 2019 டிசம்பரில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்ததால் சிறப்பு அலுவலர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அவரசர சட்ட ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பட்டுள்ள போதும் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில் பல்வேறு கிராமப் பஞ்சாயத்துகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல, மாநகராட்சிகளுடன் இணைக்கவும் செய்யப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற தலைவர், வார்டு கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்டவர்களின் பதவிக்காலம் ஜனவரி 5ம் தேதியான நேற்றுடன் நிறைவடைந்தது.
தற்போது வரை தேர்தல் நடக்காத நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் தேர்தல் நடத்தப்படாமலேயே போகலாம் என கூறப்படுகிறது.
அந்தப் பகுதிகளைத் தவிர்த்து தமிழகத்தில் எஞ்சியுள்ள கிராமப் பஞ்சாயத்துக்களின் பொறுப்புகளை கவனிக்க சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 9.624 கிராம ஊராட்சிள், 314 ஊராட்சி ஒன்றியங்கள், 28 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு புதிய பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் வரையில், உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகங்களை இந்த சிறப்பு அதிகாரிகள் கவனிப்பார்கள்.
0 Comments