Ad Code

Responsive Advertisement

விடுதலை 2 - திரைப்படம் எப்படி உள்ளது

 




#விடுதலை_2


அங்குமிங்குமாக சில

காட்சிகள் என்றில்லாமல்

நேரடியாகவே இடதுசாரி

அரசியலை பேசுகிறது விடுதலை..


கைது செய்து கைவிலங்கிட்டு

ஒரு இரவு முழுவதும் காட்டில்

நடந்து கொண்டே நிகழும்

வாத்தியார் போலீசாரோடு

பேசும் அரசியல் அடர்த்தியானது.


தப்பிச் செல்லும் போது 

காவலர்களை பார்த்து 

'நான் நிறைய கேள்விகளை

எழுப்பிருக்கேன். பதிலை நீங்க

தேடுங்க' என விஜய் சேதுபதி

பேசுவதாக வரும் காட்சி

இயக்குநர் பார்வையாளர்களை

நோக்கி பேசுவதாக இருக்கிறது..


கீழ்தஞ்சை மாவட்டங்களின்

சாணிப்பால் சவுக்கடி தண்டனை

வயலில் தாய்ப்பாலை பீச்சும்

பெண் தொழிலாளிகள் துயரம்

ஆண்டைகளின் குரூரம் என

அரைநூற்றாண்டுக்கு முன்

நடந்த கொடுமைகளையும்

'அடித்தால் திருப்பி அடி' 'டேய் னு

கூப்பிட்டா என்னடான்னு கேளு'

எனும் செங்கொடியின் தீரத்தையும்

பேசுகிறது 'விடுதலை'..


மக்களுக்கான நாம் ஆயுதம்

தாங்கி போராடுவதோடு

அவங்களை அரசியல் படுத்திட்டா

மக்களே அவங்க போராட்டத்துல

அவங்களுக்கான ஆயுதம் எதுன்னு

முடிவு பண்ணிருவாங்க..


ஆட்சில இருப்பவங்க ஒரு

Narrative ஐ முடிவு பண்ணிட்டு

அதை உண்மையாக்க என்ன

வேணும்னாலும் செய்வாங்க..


நீங்க பாட்டுக்கு துப்பாக்கிச்சூடு

நடத்தி மக்களை கொன்னுட்டு

சஸ்பென்ஸ், டிரான்ஃபர்

விசாரணை கமிஷன் னு

போய்ட்டே இருப்பீங்க, 

மக்களுக்கு அரசியல்வாதியான

நாங்கதான்யா பதில் சொல்லணும்..


பெருமாள் தப்பிச்சு போய்ட்டார்னு

ஒரு பொய்யை சொல்லிடலாம்,

மக்கள் அவரு மீண்டும் வருவாருனு

நம்பிட்டே இருக்கட்டும், அப்போதான்

அடுத்த தலைவர்களை தேட

மாட்டாங்க சார், அதான் நல்லது..


படத்தில் வெடிக்கும் துப்பாக்கி

தோட்டாக்களாய் வெடிக்கிறது

வெற்றி மாறனின் வசனங்கள்..


ஆலைகளில் நிகழும் சுரண்டல்

சங்கம் அமைக்காமல் தடுப்பது

அரசு அதிகாரிகளின் தந்திரம்

போலீஸ் கையாளும் உத்தி

என ஒவ்வொன்றையும் 

தோலுரிக்கிற காட்சிகள்...


அடையாள அரசியலின்

தாக்கங்கங்கள் ஆங்காங்கே

வசனங்களில் தென்பட்டாலும்

வர்க்க அரசியலை அழுத்தமாக

முன்வைக்கிறது விடுதலை..


திரைப்படத்தை காணும் போது,

நீண்ட உரையாடல் காட்சிகளை 

தவிர்த்திருக்கலாமோ என்று கூட 

சிலருக்கு தோன்றலாம். ஆனால்

அந்த உரையாடல்களால் தான்

விடுதலையின் அரசியலை

பேசவும் உணர்த்தவும் முடியும்.


அரசியல் உள்ளடக்கம் கொண்ட

திரைப்படத்தை வெகுஜன 

சினிமாவாக அளித்திருக்கும்

விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர்

சூரி, ராஜீவ் மேனன், இளையராஜா

எனும் அனைத்து கலைஞர்களும்

இயக்குநர் வெற்றிமாறனும்

மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்




Post a Comment

1 Comments

  1. சினிமாவிற்கு சொம்பு தூக்குவது கல்வி செய்தி வேலையா?

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement