அரசியல் பெரிய அகழி, உன்னால் தாக்குப்பிடிக்க முடியுமா? எப்படி கரை சேருவாய் என்று அச்ச உணர்வை ஏற்படுத்தினார்கள் என்று விஜய் பேசியுள்ளார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் (அக். 27) நடைபெறுகிறது.
மேடை ஏறிய விஜய் தற்போது தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி பேசியதாவது, “எனது உடன்பிறந்த சகோதரி வித்யா சிறு வயதில் மரணமடைந்தபோது மீளாத் துயரடைந்தேன். என்னுள் அந்த மரணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதேபோலத்தான், சகோதரி அனிதா மரணமடைந்தபோதும் உணர்ந்தேன். அனிதா எனது சகோதரியை போன்றவர். நீட் தேர்வு முறை இருந்ததால்தான், எல்லா தகுதியும் இருந்தும் அனிதா உயிரிழக்க நேரிட்டது. இதை எதிர்க்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக போராட உங்க விஜய் தயார்!” என்று விஜய் பேசியுள்ளார்.
0 Comments