விஜய் நடித்த கோட் படத்தின் தலைப்பில் சநாதன கருத்து இருப்பதாக விழுப்புரம் மக்களவை உறுப்பினர் டி. ரவிக்குமார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும், சநாதன கருத்து என்று தெரிந்துதான் படத்துக்கு இந்த பெயரை வைத்தார்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
படத்தின் பெயரில் சநாதனம்?
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் உலகம் முழுவதும் 5,000 திரையரங்குகளில் இன்று காலை வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு விஜய் நடிப்பில் வெளியாகும் முதல் படமான ’கோட்’டின் தலைப்பை விசிகவின் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் விமர்சித்துள்ளார்.
கோட் தலைப்பு குறித்து எக்ஸ் தளத்தில் ரவிக்குமார் தெரிவித்ததாவது:
“விஜய் படத்தின் தலைப்பில் ‘சநாதனம்’? தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்பது ஒரு சநாதனக் கருத்தில்லையா?
‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம். ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சநாதனம்’ என்ற சொல்லின் பொருள்.
இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” எனக் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments