Ad Code

Responsive Advertisement

15 மாவட்டங்களில் விற்பனைக்கு வருகிறது 20,000 வாரிய வீடுகள்

 




 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், 62 திட்டங்களில் உள்ள வீடு, மனைகளை பெற விரும்புவோர் 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பிக்கலாம்.


ஒரு இடத்தில், 500 குடும்பங்கள் வசித்து வரும் சூழலில், அங்கு குடிசைகளை அகற்றி விட்டு, வாரியத்தின் சார்பில், அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகின்றன. இதனால் ஏற்கனவே, அங்கு வசித்த, 500 குடும்பங்களுக்கு ஒதுக்கியது போக, கூடுதலாக உள்ள வீடுகள், தகுதி உள்ள நபர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன.


இவ்வகையில் விற்பனைக்குள்ள வீடுகள் குறித்த விபரங்களை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், இணையதளம் வாயிலாக வெளியிட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில், 62 இடங்களில் கட்டப்பட்ட, 20,000 வீடுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.


இந்த வீடுகள், 4 முதல், 12 லட்சம் ரூபாய் வரை விற்பனைக்கு காத்திருக்கின்றன. இதில் வீடுகள் பெற விரும்பும் மக்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், www.tnuhdb.org.in/ என்ற இணையதள முகப்பு பக்கத்தில் 'வீடு வேண்டி விண்ணப்பம்' தலைப்பில் உள்ள பிரிவில் விண்ணப்பிக்கலாம்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement