Ad Code

Responsive Advertisement

நாய் மீது காரை ஏற்றியதை தட்டிக்கேட்ட ஆசிரியருக்கு அடி உதை

 

அனகாபுத்தூர், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் இம்தியாஸ் (36). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகே நின்றிருந்த போது, அவ்வழியாக சென்ற கால் டாக்ஸி ஒன்று, தெருவில் படுத்திருந்த நாய் மீது ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது.


இதை கண்டு அதிர்ச்சியடைந்த இம்தியாஸ், கால் டாக்ஸி ஓட்டுநரிடம், வண்டியை பார்த்து ஓட்டிச் செல்லக் கூடாதா என்று கூறி உள்ளார். இதனால் இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கால் டாக்ஸி ஓட்டுநர், இம்தியாஸை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.


இதுகுறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இம்தியாஸ் மற்றும் அவரை தாக்கிய கால் டாக்ஸி டிரைவர் காட்டாங்கொளத்தூர், ஆலயம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பிரபு (30) என்பவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். நாய் மீது காரை ஏற்றியதை தட்டிக் கேட்ட ஆசிரியரை கால் டாக்ஸி ஓட்டுநர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement