Ad Code

Responsive Advertisement

செயலிழக்கும் நிலையில் சிறுநீரகத்தை காப்பாற்றியது இயற்கை மருத்துவம்

 

ரத்தக் கழிவுகளை அகற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்த நோயாளிக்கு, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை வாயிலாக சிகிச்சை அளித்து, தீர்வு காணப்பட்டு உள்ளது.


சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் டேவிட், 43; தலைமை சமையலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ரத்தத்தில், 'கிரியேட்டினைன்' அளவு அதிகரித்ததால், சிறுநீரகங்கள் செயலிழக்கும் நிலை ஏற்பட்டது. அலோபதி மருத்துவத்தில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, 'டயாலிசிஸ்' சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.


டயாலிசிஸ் சிகிச்சையை விரும்பாத அவர், அரும்பாக்கம் யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில், 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று, 14.7 ஆக இருந்த ரத்த கிரியேட்டினைன் அளவை 6.6 ஆக குறைத்துள்ளார். இந்த முன்னேற்றம் காரணமாக, டயாலிசிஸ் சிகிச்சையை அவர் தவிர்த்துள்ளார்.


இதுகுறித்து, அரும்பாக்கம் மருத்துவமனையில் கைநுட்ப தலைவர் ஒய்.தீபா கூறியதாவது:


நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவின் கழிவு அனைத்தும் ரத்தத்தில் கலந்து, சிறுநீரகத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அந்த கழிவு வடிகட்டப்பட்டு, சிறுநீர் வாயிலாக வெளியேற்றப்படுகிறது. தவறான உணவு முறை, உடல்நல பாதிப்புகள் உள்ளிட்டவற்றால், கழிவை வெளியேற்றும் திறனை படிப்படியாக சிறுநீரகம் இழக்கிறது. பொதுவாக 1.1 மி.கி., அளவில் இருக்க வேண்டிய கழிவுப் பொருளான கிரியேட்டினைன் சிறுநீரகங்களில் படிந்து, அதன் அளவு அதிகரிக்கும் போது செயலிழப்பு ஏற்படும்.


இந்நோயாளி அதிதீவிர பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார். அவருக்கு நீராவி குளியல், மண் குளியல், அக்குபஞ்சர் உள்ளிட்ட இயற்கை முறை மருத்துவம், உணவு முறை மாற்றம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. குறிப்பாக, புரதம் அதிகமாக இருக்கும் உணவுகள் தவிர்க்கப்பட்டு, குடிநீர் அருந்தும் அளவும் குறைக்கப்பட்டது. இதன் பயனாக, கிரியேட்டினைன் அளவு குறைக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.


தொடர்ந்து முறையான உணவு முறையை கடைப்பிடித்தால், அதன் அளவு மேலும் குறையும்.


இவ்வாறு அவர் கூறினார்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement