Ad Code

Responsive Advertisement

11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு

 




தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 


அதன்படி, மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும், அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடைய செய்யவும் இந்த கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.


மேற்கொண்டு இயற்கை பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து பணியாற்றி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மக்களுக்கு சென்றடைய செய்யவும் இந்த கண்காணிப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதன்படி திருப்பத்தூர், திண்டுக்கல், சென்னை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, திருப்பூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, நாமக்கல் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


எந்தெந்த மாவட்டத்திற்கு எந்தெந்த அதிகாரிகள் நியமிக்ப்பட்டுள்ளார் என்பதை பார்க்கலாம்.


  1. திருப்பத்தூர் – விஜயராஜ் குமார் ஐ.ஏ.எஸ்
  2. திண்டுக்கல் – பிரஜேந்திர நவ்னித் ஐ.ஏ.எஸ்
  3. சென்னை – ஜெயஸ்ரீ முரளிதரன் ஐ.ஏ.எஸ்.
  4. திருவண்ணாமலை – மதுமதி ஐ.ஏ.எஸ்.
  5. தூத்துக்குடி – வீர ராகவ ராவ் ஐ.ஏ.எஸ்.
  6. கள்ளக்குறிச்சி – தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐ.ஏ.எஸ்.
  7. திருப்பூர் – வள்ளலார் ஐ.ஏ.எஸ்.
  8. கோயம்புத்தூர் – நந்தகுமார் ஐ.ஏ.எஸ்.
  9. புதுக்கோட்டை – சுந்தரவள்ளி ஐ.ஏ.எஸ்.
  10. நாமக்கல் மாவட்டத்திற்கு அசியா மரியம் ஐ.ஏ.எஸ்.
  11. நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மகேஸ்வரன் ஐ.ஏ.எஸ்.








Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement