இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் வருமான வரி செலுத்துவதற்கு பான் கார்டு என்பது ஒரு முக்கியமான ஆவணமாக திகழ்கிறது. அதோடு வங்கி சார்ந்த மற்றும் தபால் நிலையங்களும் நிதி சார்ந்த பண பரிவர்த்தனைகளுக்கும் இது முக்கியமான ஆவணமாக திகழ்கிறது.
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் அதை மீறி ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் வைத்திருந்தால் அது சட்டப்படி குற்றமாகும். அப்படி வைத்திருப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் 2 பான் கார்டுகள் வைத்திருந்தால் அதில் ஒன்றை அரசாங்கத்திடம் மீண்டும் ஒப்படைத்து விடலாம். கீழுள்ள விபரத்தின்படி போலியான பான் கார்ட்டை ரத்து செய்யலாம்.
1. முதலில் “Request For New PAN Card / and Changes or Correction in Pan Data என்ற விண்ணப்ப படிவத்தை வாங்க வேண்டும்.
2. பின்பு அந்த விண்ணப்ப படிவத்தில் இருப்பதை நிரப்ப வேண்டும்.
3. இதனையடுத்து விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் நகலாக எடுத்து வைக்க வேண்டும்.
4. அதனபின்னர் அந்த ஆவணத்தை NSDL என்னும் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
5. பின்பு அந்த மையத்தில் உள்ள ஊழியர்கள் அக்னாலேஜ்மென்ட் ஸ்லிப் ஒன்று கொடுப்பார்கள்.
6. அதனை 15 நாட்களுக்குள் NSDLக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
7. அதன்பின் போலி பான் கார்டை ரத்து செய்வதற்கு கடிதம் ஒன்று எழுதி வருமான வரி மதிப்பீட்டு அதிகாரியிடம் கொடுக்க வேண்டும்.
8. இது போன்ற முறைகளை பயன்படுத்தி போலியான பான் கார்டை ரத்து செய்யலாம்.
0 Comments