Ad Code

Responsive Advertisement

மக்களே உஷார். சூப்பர் மார்க்கெட்டில் அரங்கேறும் நூதன மோசடி

 




இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது.


இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சூப்பர் மார்க்கெட்டில் நூதன மோசடி அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


நான் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கும் போது அவர்கள் கொடுக்கும் பில் – ஐ சரி பார்க்காமல் அதில் தெரியும் பணத்தை கட்டி விட்டு வருவோம்.


அந்த வகையில் காரைக்குடியில் இயங்கி வரும் ஸ்மார்ட் பஜார் சூப்பர் மார்க்கெட்டில் நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளனர். நபர் ஒருவர் வாங்கிய 72 ரூபாய் மதிப்புள்ள பொருளுக்கு 252 ரூபாய் என பில் போடப்பட்டுள்ளது. அவர் எதர்ச்சியாக பார்த்து கேட்டதால் பணத்தை திருப்பி தருவதாக கூறியுள்ளனர். 


அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நபர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பொதுமக்கள் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிய பிறகு பில்லில் இருக்கும் தொகை சரியானதா என ஒரு முறை சரிபார்த்துக் கொள்வது நல்லது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Post a Comment

1 Comments

  1. பில்லில் விலைபட்டியலை சரி பார்க்கவே முடியாது. அங்கு தெளிவாக இருக்காது. டிமார்ட் உடன் ஓப்பிடும் போது விலையும் அதிகம். வேலை செய்பவர்களிடம் விலை கேட்டால் தெரியாது என்பார்கள்.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement