Ad Code

Responsive Advertisement

ஒன்றிய அரசு, மாநில உரிமை, நீட் விலக்குக்கு ஆதரவு - 'திராவிட' குரல் ஒலித்த நடிகர் விஜய் - முழு பேச்சு விவரம்

 



நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது; கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என திராவிடக் கட்சிகளின் பாணியில் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்.


சென்னையில் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக 2-வது கட்டமாக இன்று ஊக்கத்தொகை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இந்த ஊகத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.


நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு: 


இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக வலுவாகவே குரல் கொடுத்தார். நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்; நீட் தேர்வால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலப் பாடத்திட்டத்தை படிக்கும் மாணவர்கள், மத்திய அரசு பாடத் திட்டத்தின் கீழான நீட் நுழைவுத் தேர்வை எப்படி எழுத முடியும்? என சரமாரியாக தாக்கினார்.


மாநில உரிமைகளுக்கு எதிரானது: 


இதற்கு அடுத்ததாக மாநில உரிமைகள் குறித்து சற்று வேகமாகவே பேசினார் நடிகர் விஜய. அதாவது நீட் தேர்வு என்பதே மாநில உரிமைகளுக்கு எதிரானது. ஏனெனில் கல்வி என்பது மாநிலப் பட்டியலில்தான் 1975-க்கு முன்பு வரை இருந்தது. அதன்பின்னர்தான் 'ஒன்றிய' அரசு மாநிலப் பட்டியலில் இருந்து கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியது. ஆகையால் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும். அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்; சிறப்பு பொதுப்பட்டியலை உருவாக்கி கல்வி, சுகாதாரத்தை இடம் பெறச் செய்ய வேண்டும் என அப்பட்டமாக திராவிட கட்சிகளின் குரலை அப்படியே வெளிப்படுத்தினார் விஜய்.


4 முறை ஒன்றிய அரசு: 


மத்திய அரசை திமுக, நாம் தமிழர் கட்சி, திராவிட இயக்கங்கள்தான் ஒன்றிய அரசு என குறிப்பிடுவது வழக்கம். அதையே நடிகர் விஜயும் பயன்படுத்தினார். மொத்தம் 4 முறை ஒன்றிய அரசு என சுட்டிக்காட்டினார் விஜய்.


நீட் தேர்வு ரத்து - நீட் விலக்கு: 


நீட் முறைகேடுகளால் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மையே போய்விட்டது. இதற்கு ஒரே தீர்வு நீட் தேர்வு ரத்து.. நீட் விலக்கு.. தமிழ்நாடு அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி கொண்டு வந்துள்ள மசோதாவை நான் முழுமையாக வரவேற்கிறேன். ஒன்றிய அரசு இதற்கு உரிய அனுமதி தர வேண்டும் என்றார். ஒரே நாடு நாடு பாடத் திட்டத்தை விமர்சித்த நடிகர் விஜய்,


வலுவான அரசியல் பேச்சு: 


நடிகர் விஜய் கடந்த முறை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கிய நிகழ்ச்சியில் நான் அரசியல் பேசவரவில்லை என்றார். மேலும் அந்த கட்சியை விமர்சிக்கவில்லை; இந்த கட்சியை விமர்சிக்கவில்லை எனவும் கூறப்பட்டது. தற்போது நீட் தேர்வுக்கு எதிராக வலுவான குரல் கொடுத்து இந்த பிரச்சனையில் தமிழக அரசுக்கும் ஆதரவு தந்ததுடன் மாநில உரிமைகளுக்காகவும் "திராவிடக் கட்சி"களைப் போல குரல் கொடுத்துள்ளார் நடிகர் விஜய். நடிகர் விஜய்யின் இந்த அரசியல் பேச்சு உன்னிப்பாக கவனிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement