Ad Code

Responsive Advertisement

வெள்ளிக்கிழமைகளில் இதையெல்லாம் மறந்தும் செய்யாதீங்க!

 



வெள்ளிக்கிழமைகளில் இந்த விஷயங்களை எல்லாம் மறந்தும் செய்யாதீங்க. நல்ல விஷயங்களை செய்யலைன்னாலும் பரவாயில்லை...


எதிர்மறையான விஷயங்களைச் செய்யாதீங்க. நல்ல காரியங்களைத் துவங்குவதற்கு வெள்ளிக்கிழமை சிறப்பான நாள். அனைத்து மதங்களிலுமே வெள்ளிக்கிழமைக்கு சிறப்பான இடம் உண்டு. புனித வெள்ளி என்று கிறிஸ்தவ சகோதர்கள் ஆராதிக்கிறார்கள். 


வெள்ளிக்கிழமை தவறாமல் மசூதிக்கு சென்று பிரார்த்தனைகளில் இஸ்லாமிய சகோதரர்கள் வழிபடுகிறார்கள். இன்று வெள்ளிக்கிழமை இந்த விஷயங்களை நீங்கள் கடைப்பிடிக்க துவங்கலாம். அதன் பிறகு உங்கள் வாழ்க்கை ஏற்றம் பெறுவதை உணர்வீர்கள்.


நாள், கிழமைகள் உதவுகிறதைப் போல அண்ணன், தம்பி கூட உதவ மாட்டாரகள் என்பார்கள். அதனால, வெள்ளிக்கிழமைகளில் இந்த விஷயங்களை மட்டும் செய்யவே செய்யாதீங்க. 


எவ்வளவு தான் சம்பாதித்தாலும் பணம் உங்கள் கைகளில் தங்க மறுக்கிறதா? மறந்தும் இந்த விஷயங்களை எல்லாம் வெள்ளிக்கிழமைகளில் செய்யாதீங்க. ஏனெனில், மகாலட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது.


நம்மிடம் செல்வம் வருவதற்கும், நிரந்தரமாக தங்குவதற்கும் வெள்ளிக்கிழமைகளில் சில அடிப்படையான விஷயங்களைக் கடைப்பிடித்து வர வேண்டும். 


பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு நிரந்தரமாகவே சென்று விடுவாள் என்பது ஐதீகம்.அதே போல நாம் வசிக்கும் வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும்.


வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் செய்யக் கூடாத விஷயங்கள் என்று நமது சாஸ்திரம் சில அடிப்படையான விஷயங்களை வகுத்து வைத்திருக்கிறது. இந்த விஷயங்களை எல்லாம் மறந்தும் செய்யாதீங்க… அப்படி உங்களுக்குத் தெரியாமலேயே இதையெல்லாம் நீங்க இதுநாள் வரையில் செய்து வந்திருந்தால், அதுவே கூட உங்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இத்தனைக் காலங்களும் இருந்திருக்கலாம். 


எவ்வளவோ சம்பாதித்தாலும், பொருள் வீடு வந்து சேரலை.. நிரந்தரமாக செல்வம் தங்காமல் கடனில் தத்தளிக்கிறேன் என்று சிலர் புலம்புவதைக் கண்டிருக்கலாம். அதற்குப் பின்னால் இந்த மாதிரியான அஜாக்கிரதை காரணங்களாக இருக்கும்.


வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது கூடாது. குறிப்பாக பச்சரிசியை அஜாக்கிரதையாக கையாளாதீர்கள். அப்புறம் பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன் கொடுத்தல் இரண்டுமே கூடவே கூடாது. 


அதே போன்று வெள்ளிக்கிழமைகளில் சமையலறையில் பால் பொங்கி கீழே வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாலை 6 மணிக்கு மேல், வீட்டில் விளக்கேற்றிய பிறகு தலையை விரித்துப் போட்டப்படி வாரிக் கொண்டிருப்பது, பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது.


விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வீட்டை விட்டு வெளியே வீசக் கூடாது. அதே போன்று, காலை அல்லது மாலை நேரங்களில் வீட்டில் உள்ள மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, விளக்கேற்றக் கூடாது. வெள்ளிக்கிழமைகளில் நகம், முடி போன்றவற்றை வெட்டக் கூடாது.பூஜையின் போது, விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. 


இதை எல்லா நாளிலுமே கடைப்பிடிக்கலாம். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் இதை செய்யவே செய்யாதீங்க.துண்டைக் கட்டிக் கொண்டோ, துண்டை தோளில் போட்டுக் கொண்டோ, ஈர ஆடைகளுடன் சாமி கும்பிடக் கூடாது.தேங்காயை, பூஜைக்கு படைக்கும் போது, உடைக்கும் சமயத்தில் எதிர்பாரா விதமாக இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைத்தால், அவற்றை எக்காரணம் கொண்டும் சாமிக்கு படைக்கக் கூடாது. 


இயற்கை பூக்களுக்கு பதிலாக, பிளாஸ்டிக் பூக்களையும், மா மற்றும் தென்னை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் தோரணங்களையும் கட்டுதல் கூடாது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement