தமிழ்நாட்டில் 4.83% மின்கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 0 முதல் 400 கிலோ வாட் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ரூ.4.60-லிருந்து ரூ.4.80 ஆகவும், 401 முதல் 500 கிலோ வாட் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ரூ.6.15லிருந்து ரூ.6.45ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது
முதல் 100 யூனிட்டுக்கான இலவச மின்சாரம் தொடரும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டளர்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 400 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ.4.60லிருந்து ரூ.4.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
401 முதல் 500 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ.6.15லிருந்து ரூ.6.45ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 501 முதல் 600 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8.15லிருந்து ரூ.8.55ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
601 முதல் 800 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ.9.20லிருந்து ரூ.9.65ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 801 முதல் 1000 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ.10.20லிருந்து ரூ.10.70ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
1,000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கான மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ.11.25லிருந்து ரூ.11.80ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மின் இணைப்பு வாங்குபவர்களுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் வணிக பயன்பாட்டு மின்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. 50 கி.வாட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.9.70லிருந்து ரூ.10.15ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கிலோவாட்டுக்கான வாடகையும் ரூ.307லிருந்து ரூ.322ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 112 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கான வாடகை ரூ.562லிருந்து ரூ.589ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
0 Comments