10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் இன்று சென்னையில் விருது வழங்கினார். இந்த விழாவில் பங்கேற்ற ஆசிரியை ஒருவர் மேடையில் பாட்டு பாடி அசத்தினார். அனைத்து கட்சிகளையும் ஊதி தள்ளிவிட்டு விஜயை முதல்வராக்குவதாக அவர் பாடிய பாட்டால் நடிகர் விஜய் பூரித்தப்போனார். அந்த ஆசிரியை பாடிய பாடல் தொடர்பான வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது
மகேஷ்வரி என்ற ஆசிரியை விழாவில் பங்கேற்றார். அவர் விஜய் குறித்து மேடையில் பேசியது மற்றும் பாடல் பாடியது தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. ஆசிரியை மகேஷ்வரி பேசியதாவது: எங்கள் உயிரிணும் மேலான விஜய் அண்ணா, கட்சி தோழர்களே, பெற்றோர்களே இந்தியாவின் வருங்கால தூண்களான மாணவ செல்வங்களே, அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் மகேஷ்வரி. நான் ஆசிரியையாக பணியாற்றுகிறேன்.
நல்ல ரசிகன் கலைஞனாக உருவெடுப்பதும், நல்ல கலைஞன் தலைவராக அவதரிப்பதும், நல்ல தலைவர் நல்ல அண்ணனாக வழிநடத்தி செல்வதும், இவரால் மட்டுமே சாத்தியம். ஆம், நமது தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், அன்பு அண்ணா தளபதி விஜயால் மட்டுமே சாத்தியம்.
‛‛பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்'' அனைவரும் பிறப்பால் சமமே. சாதி, மதம், இனம், மொழி, அந்தஸ்து அனைத்தையும் கடந்தது மனிதம் தான். அதற்கு உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் அண்ணா விஜய். ‛‛கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை'' கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம் என்பதை உணர்ந்து தமிழக கல்வி விருது வழங்கும் விழாவில் சான்றிதழ், பொன்னாடையை மாணவர்களுக்கு அளித்து மாணவர்கள் மனதிலும், பெற்றோர் மனதிலும் மட்டுமில்லாமல் அனைத்து மக்களின் மனதிலும் இடம்பிடித்துள்ளார்.
‛இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்' ஒருவரிடம் இருந்து வரும் சொல் இனிமையாகவும், இன்னொருக்கு வழங்கும் தன்மையும் கொண்டதாக இருப்பின் இந்த வையகம் வசப்படும் என்பது இவ்வுலக மக்கள் அனைவரின் மனதிலும் உயர்ந்த இடத்தில் விஜய் உள்ளார். ‛‛உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து'' ஒருவர் செய்த உதவியின் மதிப்பு அந்த உதவியை பொறுத்தது அல்ல. உதவியின் நபரின் மனதை பொறுத்ததாகும் என்ற வள்ளுவர் வாக்குக்கு இணங்க நீதி நெறியோடு ஆட்சி பண்பு கொண்ட விஜய்க்கு அனைவரின் சார்பிலும் கோடான கோடி நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இறுதியாக சிறிய பாடலுடன் முடிக்கிறேன் (நடிகர் விஜயின் வாங்கண்ணா வணக்கமுங்கண்ணா பாடல் வரிகளை சற்று மாற்றி பாடினார்).
வாங்கண்ணா.. வணக்கமுங்கண்ணா..
My song ஒன்னு கேளுங்கண்ணா..
நான் ஓலரல.. ஓலரலண்ணா..
Its My feeling Feelingண்ணா..
கட்சியில் சேரணும்ணு வீட்டில் சொன்னேனுங்ண்ணா..
விடவே இல்லையங்கண்ணா..
தமிழக வெற்றிக் கழக விஜய் அண்ணா கட்சினு சொன்னேங்கண்ணா..
ஓகேனு.. ஓகேனு சொன்னாங்கண்ணா..
ஓகேனு சொன்னாங்கண்ணா..
மகளிர் அணி.. மாணவர் அணி..
கட்சினு வந்தாங்கண்ணா..
எல்லாரும் சொன்னாங்க ஓகேனுங்கண்ணா..
AD ஊதுறோம்... ஊதுறோம்.. ஊதுறோம்கண்ணா..
எல்லா கட்சியையும் ஊதுறோம்கண்ணா.. ப்புண்ணு!
ஊதுறோம்... ஊதுறோம்.. ஊதுறோம்கண்ணா..
எல்லா கட்சியையும் ஊதுறோம்கண்ணா..
ஆக்குறோம்.. ஆக்குறோம்.. ஆக்குறோம் அண்ணா..
உங்களை முதலமைச்சர் ஆக்குறோம் அண்ணா..
ஆக்குறோம்.. ஆக்குறோம்.. ஆக்குறோம் அண்ணா..
உங்களை முதலமைச்சர் ஆக்குறோம் அண்ணா..
Thanksங்க.. Thanksங்க.. Thanksங்கண்ணா..
இந்த சான்ஸ்க்கு ரொம்ப Thanksங்கண்ணா..
என பாடி மேடையை கலகலப்பாக்கினார். இந்த வேளையில் அங்கிருந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் உற்சாகமடைந்தனர். விஜய் மேடையில் நின்றபடி அவரது பேச்சு மற்றும் பாடலை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
0 Comments