Ad Code

Responsive Advertisement

தரமில்லாத உணவு விற்கப்படுகிறதா? புகார் அளிக்க வழிமுறைகள் இதோ..!

 




உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, தெருவில் கூவி விற்கும் உணவுப் பொருளாக இருந்தாலும், பெரிய உணவகங்களில் விற்கப்படும் உணவாக இருந்தாலும், அவற்றை விற்பதற்கான உரிமத்தை உணவுப் பாதுகாப்பு துறையிடம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.


"தமிழ்நாடு அளவில் உணவு தொடர்பான புகார்கள் எதுவானாலும், 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கவும் இந்த எண்ணை 94440 42322 பயன்படுத்தலாம். தரமற்ற உணவு சாப்பிட்ட உணவகத்தின் புகைப்படம், சாப்பிட்ட உணவின் புகைப்படம், கட்டண ரசீது(பில்) ஆகியவற்றை அனுப்பி, புகார் அளிக்கலாம்.


செல்போன் எண்ணுக்கு வரும் புகார்களை, சென்னையில் உள்ள உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் தொடர்ந்து கண்காணிக்கிறார். அந்த எண்ணுக்கு வந்த புகார் எந்த மாவட்டத்தைச் சேர்ந்ததோ சம்பந்தப்பட்ட அந்த மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு அனுப்புவார். அவர் வட்டார அளவிலோ, நகராட்சி அளவிலோ இருக்கும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிக்கு, அந்தப் புகாரை அனுப்பி தரமற்ற உணவு வழங்கிய கடையில் என்ன தவறு நடந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட கடையின் மீது சட்டத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பார்.


மேலும், நடவடிக்கை எடுத்த உடனே, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலருக்கு அந்தத் தகவல் பகிரப்படும். புகார் அளிக்கப்பட்ட மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர், மீண்டும் 94440 42322 எண்ணைத் தொடர்புகொண்டு தலைமை கட்டுப்பாட்டு மையத்துக்கு, புகாரளிக்கப்பட்ட கடையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்பார்.


அதன் பின் தரமற்ற உணவு தொடர்பாகப் புகார் அளித்தவருக்கு, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான ரசீது, 24 மணி நேரத்துக்குள் அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாட்டில் மட்டுமே தரமற்ற உணவு தொடர்பாக புகார் அளிப்பதற்கென்று இதுபோன்று சிறப்பு நடைமுறைகள் உள்ளன.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement