கோடைக்காலம் ஆரம்பமாகிவிட்டது இந்த வானிலை வெப்பக் காற்றை அதிகம் வெளிப்படுத்துவதால் உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.
கோடைக் காலம் நமது வளர்சிதை மாற்றம், செரிமானம், திரவ சமநிலை உள்ளிட்ட உடல் செயல்பாடுகளைப் பாதிக்கிறது. உணவில் சிறிதளவு மாற்றம் செய்தாலும் நோய்வாய்ப்படும் அபாயம் உள்ளது. இந்த பருவத்தில் சில உணவு பொருட்களைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இதைப் பற்றி சுகாதார நிபுணர் பிரியங்கா ஜெய்ஸ்வாலிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.
கோடையில் இவற்றைச் சாப்பிடுவதை தவிர்க்கவும்
கோடைக்காலத்தில் குளிர்ந்த பீர் குடிப்பதை மக்கள் ரசிக்கிறார்கள் ஆனால் அது நம் ஆரோக்கியத்தை மோசமாகப் பாதிக்கிறது. ஆல்கஹால் உட்கொள்வது உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் ஹைபோதாலமஸ் சுரப்பியின் செயல்பாட்டைக் குறைக்கிறது. அதே நேரத்தில் இது ஒரு டையூரிடிக் என்பதால் மீண்டும் மீண்டும் சிறுநீர் கழிக்க தூண்டுகிறோம் இதனால் நம் உடலில் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது.
டீ மற்றும் காபி நம் அனைவருக்கும் பிடித்த பானங்களில் ஒன்றாகும். ஆனால் கோடைக் காலத்தில் இவற்றிடம் இருந்து சற்று தூரமாகவே இருக்க வேண்டும். இந்த காஃபின் கொண்ட பானங்கள் அனைத்தும் டையூரிடிக்ஸ் என்பதால் உடலில் நீர்ச்சத்து குறைவை ஏற்படுத்தி உங்களை பலவீனமாக உணர வைக்கும்.
புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். இதனால் நீரிழப்பை உங்களால் உணர முடியும். புரதங்களில் இயற்கையாக நிகழும் நைட்ரஜனை வளர்சிதை மாற்ற உடல் அதிக தண்ணீரைப் பயன்படுத்துகிறது இதனால் உயிரணுக்களில் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.
வெயில் காலத்தில் அசைவம் அல்லது காரமான உணவுகளைச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது உடலின் வெப்பநிலையைச் சீர்குலைப்பதோடு செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
நொறுக்குத் தீனி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இப்போதெல்லாம் மக்கள் பீட்சா, பர்கர், பஜ்ஜி, மோமோஸ் போன்றவற்றை அதிகம் சாப்பிடுகிறார்கள். இவை எண்ணெய் மற்றும் சுகாதாரமற்றவை என்பதால் வயிற்று உபாதையை ஏற்படுத்தும். இதனால் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன.
கோடையில் சிலர் தாகம் எடுக்கும்போது, எனர்ஜி பானங்கள், சோடா அல்லது விளையாட்டு பானங்கள் போன்ற இனிப்பு பானங்களை உட்கொள்ளத் தொடங்குவார்கள். இது போன்ற பானங்களை வாங்கி கூடிப்பதை தவிர்க்க வேண்டும். இவற்றில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் நீரிழப்பு மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
0 Comments