Ad Code

Responsive Advertisement

தற்கொலைக்கு முயன்ற ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி உயிரிழப்பு

 



தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி இன்று(மார்ச் 28) காலை 5 மணிக்கு உயிரிழந்தார்.


ம.தி.மு.க.,வைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ஈரோடு தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இந்த முறை ஈரோடு தொகுதியை தி.மு.க., எடுத்துக் கொண்டது. இதனால் கணேசமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.


கடந்த ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 24) அவரது வீட்டில் தென்னைக்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடல்நலன் பாதிக்கப்பட்ட அவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.


இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ம.தி,மு.க, நிர்வாகிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement