Ad Code

Responsive Advertisement

சிங்கங்களுக்கு பெயர் வைத்த வன அதிகாரி சஸ்பெண்ட்

 



மேற்குவங்கம் சலிகுரி உயிரியல் பூங்காவில் இரு சிங்கங்களுக்கு ‛‛அக்பர் ,சீதா'' என பெயரிட்ட வன அதிகாரியை சஸ்பெண்ட் செய்து திரிபுா அரசு உத்தரவிட்டது.


திரிபுரா மாநிலத்தில் செபாஜிலா என்ற உயிரியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்கம் சிலிகுரி சபாரி உயிரியல் பூங்காவிற்கு பிப்.12-ம் தேதி ஆண், பெண் என 2 சிங்கங்கள் கொண்டு செல்லப்பட்டன. இதில் ஆண் சிங்கத்திற்கு 'அக்பர்' எனவும், பெண் சிங்கத்திற்கு 'சீதா' எனப் பெயரிடப்பட்டு மேற்குவங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.


இது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் எனவும், பெயரை மாற்ற உத்தரவிட கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பெயரை மாற்றி புதிதாக வைக்கவும் உத்தரவிட்டது.


இந்நிலையில் சிங்கங்களுக்கு பெயர் வைத்த ஐ.எப்.எஸ். அதிகாரி பிரபின் லால் அகர்வால் என்பவரை , திரிபுரா அரசு சஸ்பெண்ட் செய்தது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement