Ad Code

Responsive Advertisement

அரசு பேருந்தில் மாட்டிறைச்சி கொண்டு செல்வது குற்றமா? - அமைச்சர் விளக்கம்

 



அரசு பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாகக் கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை அரங்கேறியுள்ளது. மூதாட்டி அடுத்த நிறுத்தத்தில் இறக்கி விட கேட்ட நிலையில், நடத்துனர் நடுவழியிலே இறக்கிவிட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் சசிகுமார் மற்றும் நடத்துநர் ரகு ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில், "அரசு பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்வது குற்றமில்லை. அரசு பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம். 


அரசு பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை. மாட்டிறைச்சி கொண்டு சென்ற மூதாட்டி பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட விவகாரத்தில் 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என அமைச்சர் தெரிவித்தார்.





Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement