Ad Code

Responsive Advertisement

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? - இது உங்களுக்கான பதிவு

 



இன்றைக்கு அனைவரது கைகளிலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் கண்டிப்பாக இருக்கும். வெளியூர் செல்வதாக இருந்தாலும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதாக இருந்தாலும் அவர்கள் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும் என்றாலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் தான் முதன்மைத் தேர்வாக இருக்கும். 


புது புது மாடல்களுடன் மலிவான விலையிலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் கிடைப்பதால் 90 சதவீத மக்கள் இதைத் தான் பயன்படுத்துகின்றனர். 


இவற்றில் நீங்களும் ஒருவராக இருந்தால், உடனே நிறுத்திவிடுங்கள். ஏனென்றால் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரைக் குடிப்பதால் பல்வேறு பக்க விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். இதோ என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.


பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்:

பிளாஸ்டிக்கிலிருந்து வரும் ரசாயனங்கள் நம் உடலுக்குள் நேரடியாக செல்லும் போது நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. இதனால் தான் எப்போதும் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தண்ணீரை சேமிக்கவோ அல்லது குடிக்கவோ கூடாது என்றும் எப்போதும் மருந்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


பிளாஸ்டிக்கில் பித்தாலடிஸ் (phthalates) என்ற வேதிப்பொருள் இருக்கிறது. நாம் தினமும் பிளாஸ்டிக் பாட்டிலைப் பயன்படுத்தி தண்ணீர் குடிக்கும் போது கல்லீரல் புற்றுநோய் மற்றும் ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கைக் குறைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.


தினமும் நாம் பிளாஸ்டிக் பயன்படுத்தி தண்ணீர் குடிக்கும் போது, இதில் உள்ள ரசாயனங்கள் நீரழிவு, உடல் பருமன், கருவுறுதல் பிரச்சனைகள் மற்றும் பெண் குழந்தைகள் தாமதமாக பருவமடைதல் போன்ற உடல் நல பிரச்சனைகளையெல்லாம் சந்திக்க நேரிடும்.


பிளாஸ்டிக் பாட்டில்களை நாம் அதிகமாக பயன்படுத்தும் போது இதில் உள்ள வேதிப்பொருள்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் செல்ல நேரிடும். குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அபாயத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பிளாஸ்டிக்கிலிருந்து வரக்கூடிய ஆபத்தான நச்சுகள் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு மற்றும் கருப்பை புற்றுநோய் போன்ற பல்வேறு உடல் நல பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்துகிறது.


தீர்வு என்ன?

சமையல் அறை முதல் வீட்டில் நாம் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான பொருள்கள் பிளாஸ்டிக் தான். இவற்றைப் பயன்படுத்தித் தூக்கி எறியும் போது சுற்றுச்சுழல் பாதிப்போடு உடல் நல பாதிப்பையும் நமக்கு ஏற்படுத்தும். ஆம் பெரும்பாலான பிளாஸ்டிக் கழிவுகள் நிலப்பரப்பு மற்றும் நீர்நிலைகளில் சேருகிறது, இது கடல் வாழ் உயிரினங்களுக்கு இடையூறு விளைவிப்பதோடு நிலத்தை மாசுபடுத்துகிறது. 


இந்நிலையில் நாம் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தி தண்ணீர் குடிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக நம் உடல் முழுவதும் நச்சு கலக்க நேரிடும். எனவே உடல் நலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றால், இனி மேலாவது எஃகு குடுவைகள், கண்ணாடி பாட்டில்கள், துருப்பிடிக்காத எஃகு பாட்டில்கள் அல்லது அலுமினிய பாட்டில்கள் போன்றவற்றைப் பயன்படுத்த முயற்சி செய்யவும். 


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement