அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்த செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை சற்று முன்னர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார், ராஜினாமா கடிதத்தை அவர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத பண பரிவர்த்தையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை ஜூன் மாதம் 14-ம் தேதி அதிகாலை கைது செய்தது. அவரை கைது செய்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்பு அவருக்கு அங்கு நடந்த பரிசோதனையில் இருதயத்தில் இரத்த அடைப்பு உள்ளது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டதுஅதன்பின்பு நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ளார்.
செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து அவரிடம் இருந்த இரு துறைகள் வெவ்வேறு அமைச்சர்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டன.
அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின் துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆய தீர்வை துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது
மேலும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி நள்ளிரவில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்
0 Comments