Ad Code

Responsive Advertisement

நடிகர் விஜய் கட்சி பெயரில் திடீர் மாற்றம்

 




நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.


இந்த நிலையில் 'தமிழக வெற்றி கழகம்' என்ற விஜய்யின் கட்சி பெயரில், 'க்' விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக் காட்டினர். கட்சிப் பெயரிலேயே தவறு இருப்பதாக பிற கட்சியினரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.


இதனை தொடர்ந்து தனது கட்சியின் பெயரில் 'க்' சேர்த்து 'தமிழக வெற்றிக் கழகம்' என்று மாற்ற நடிகர் விஜய் ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து அக்கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் 'க்' சேர்த்து 'தமிழக வெற்றிக் கழகம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement