தமிழக மின்சார வாரியம், மின் கட்டணம் செலுத்துவதற்கான புதிய முறையை தற்போது அறிமுகம் செய்துள்ளது.. இந்த புதிய முறைப்படி, எப்படி கரண்ட் பில் கட்டுவது தெரியுமா?
சமீபகாலமாகவே, கரண்ட்பில் ரீடிங் எடுப்பதில் நிறைய குளறுபடிகள் நடப்பதாக பொதுமக்கள் தரப்பில் அதிருப்திகள் எழுந்து வந்தது.. இந்த முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், மின்வாரியத்துக்கு கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் "ஸ்மார்ட்' மீட்டர்" திட்டத்தை கொண்டுவர தமிழக அரசு முயன்று வருகிறது. இதற்காக டெண்டர்களுக்கும் விடப்பட்டுள்ளன.
புதிய நடைமுறை: மற்றொருபக்கம், கரண்ட் பில் குளறுபடிகளை போக்குவதற்காக, "புளூடூத் ஸ்மார்ட் மீட்டரை" இணைக்கும் திட்டத்தையும் தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. அதன்படி, வீடுகளில் ப்ளூடூத் மீட்டரை பொருத்தி விட்டால், ஃபைபர் ஆப்டிக் போர்ட்கள் மூலம் அதனை கண்காணிக்கலாம். இதனால் கால நேரம் குறைவதுடன், துல்லியமான கரண்ட் பில் எவ்வளவு என்பதையும் நம்மால் அறிந்து கொள்ளலாம்
இதற்கு நடுவில் இன்னொரு வசதியை மின்வாரியம் செய்து தரப்போவதாக சொன்னார்கள்.. பொதுவாக, மின் ஊழியர்கள், வீடுகளில் வந்து ரீடிங் எடுத்துவிட்டால், அதற்கு பிறகு, தங்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விபரங்களை, அலுவலக கம்ப்யூட்டரில் அப்லோடு செய்வது வழக்கம்.. பிறகு அடுத்த சில நாட்களில், மின் கட்டண விபரம் நுகர்வோருக்கு, SMS வாயிலாக அனுப்பப்படுவதும் வழக்கமான ஒன்றுதான்.
மொபைல் ஆப்: ஆனால், கணக்கெடுத்த உடனேயே, கட்டண விபரம் தெரிவிக்கவே, புது "மொபைல் செயலி" நடைமுறைக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி, உங்கள் கரண்ட்பில் குறித்த அப்டேட், அடுத்த நொடியே, உங்களுக்கு மெசேஜ் மூலமாக கிடைத்துவிடுமாம்.
இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக இன்னொரு வசதியை மின்சார வாரியம் ஏற்படுத்தியிருக்கிறது.. அதன்படி, செல்போனில் மெசேஜ் மூலமாகவே கரண்ட் பில் கட்டும் வசதியை மின்வாரியம் கொண்டுவந்துள்ளது.
கரண்ட் பில்: வழக்கமாக கரண்ட் பில் கட்டுவதானால், நேரில் சென்று பணம் கட்டுவோம் அல்லது ஆன்லைனில் கரண்ட் பில் கட்டுவோம்.. ஆனால், இப்போது, மெசேஜ் மூலமாகவே கரண்ட் பில் கட்டிவிடலாம். செல்போனுக்கு அதிகாரப்பூர்வமான மெசேஜ் வந்ததுமே, நீங்கள் மின்கட்டணத்துக்கான தொகையை எளிதாக செலுத்திவிடலாம்.
அதாவது, உங்கள் வாட்ஸ்அப்புக்கு வரும் மெசேஜில் லிங்க் ஒன்று தரப்பட்டிருக்கும்.. அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.. பிறகு, அதனருகில் உள்ள பெட்டியில் கேப்சா எண்ணை உள்ளிட வேண்டும்.. இப்போது கட்டணம் செலுத்தும் செயல்முறை ஆரம்பமாகும்
மின்கட்டணம்: கட்டணம் செலுத்தும் பக்கம் திறந்ததுமே, அதில் நீங்கள் எந்த வகை மின்கட்டணத்தை செலுத்த உள்ளீர்கள் என்பதை தேர்வு செய்து அதன்பிறகு, மின்கட்டணத்தை செலுத்திவிடலாம்.. இதன்மூலம் எளிதில் மின்நுகர்வோர் தங்களுக்கான மின்கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகளும் நடந்து முடிந்துவிட்டால், கரண்ட் பில் கட்டுவது மேலும் எளிதாகிவிடும் என்று நம்பப்படுகிறது.
0 Comments