ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி சந்தை மேட்டு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் இரவு திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது மருத்துவமனையில் டாக்டர் இல்லை. ஒரு செவிலியர் மட்டும் இருந்ததால், பொறுப்பு மருத்துவர் இளங்கோவுக்கு அமைச்சர் போன் செய்துள்ளார்.
ஆனால் மருத்துவர் போன் எடுக்கவே இல்லை என தெரிகிறது. இதையடுத்து ராணிப்பேட்டை சுகாதார துணை இயக்குநர் மணிமாறனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இதையடுத்து அமைச்சர் போன் செய்தபோது எடுக்காத வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோவிடம், மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
0 Comments