Ad Code

Responsive Advertisement

அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை: பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபசாகுமா?

 



தொலைதூரம் செல்லக் கூடிய பேருந்துகள் இன்று நள்ளிரவு 11.59 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி நாளை போராட்டம் தொடங்கும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.


அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம், 19ம் தேதி, சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட, 26 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின.


வேலை நிறுத்தத்தை தவிர்க்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்படி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.


போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து, இதுவரை மூன்று கட்ட பேச்சு நடந்துள்ளது. இருப்பினும், பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.


அமைச்சருடன் தொழிற்சங்கங்கள் நேற்று பேசுவதாக இருந்தது. ஆனால், உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று துவங்கியதால், அமைச்சருடன் இன்று பேச்சு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று காலை, 11:00 மணிக்கு கூட்டம் நடக்கிறது.


ஓய்வூதியர் அகவிலைப்படி உயர்வு, பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய நான்கு மாத அகவிலைப்படி உயர்வு, ஊதிய ஒப்பந்த பேச்சு தேதி அறிவித்தல் போன்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என, தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement