Ad Code

Responsive Advertisement

இஞ்சி - ஏற்படும் நன்மைகள்தெரியுமா ?

 




இஞ்சி நம் சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இஞ்சி உணவு செரிமானத்திற்கு உதவும் ஒரு முக்கிய உணவுப் பொருளாகும்.மருத்துவ உலகில் நோய்க்கு தீர்வளிக்கும் அனைத்து மருந்துகளிலும் இஞ்சி இடம் பெறுகிறது.இஞ்சி நறுமணத்திர்க்காகவும் சமையலில் உணவின் ருசியை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகிறது.


தினமும் காலையில் இஞ்சியை சூடான தண்ணீரில் சேர்த்து சற்று நேரம் வேகவைத்து வெறும் வயிற்றில் குடிப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.


2 கப் தண்ணீரில், 4 முதல் 6 தோல் நீக்கிய இஞ்சி துண்டுகளை போட்டு 20 நிமிடம் கொதிக்க வைத்து அதனுடன் தேன் அல்லது பணங்கற்கண்டு சேர்த்து அருந்துவதால் மனதுக்கு புத்துணர்ச்சி அடைவதோடு உங்கள் உடலுக்கும், பல வலிகளுக்கு தீர்வாக அமைகிறது.


இஞ்சியில் மிக சிறந்த மருத்துவ குணம் உள்ளது. இது வயிறு சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் குமட்டல் இதிலிருந்தும் விடுபடலாம்.


இஞ்சியை இதயத்தின் நண்பன் என்று கூறுவார்கள்.இதயம் ஆரோக்கியமாக இருக்க இந்த நீரைப் பருகுவது மிகவும் நல்லது.ரத்த அழுத்தம், கொழுப்பை குறைக்க இது சிறந்த தீர்வாக அமைகிறது.மாரடைப்பு அபாயங்களை குறைப்பதற்கும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் மிகவும் முக்கியமாக இஞ்சி தேநீர் பயன்படுகின்றது.


மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக அளவு ஏற்படும் வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக இந்த தேநீர் உதவுகின்றது.


பசியை உண்டாக்கும் இஞ்சிச் சாறு


இஞ்சியை மேல் தோல் நீக்கி அரைத்து, நீர் கலந்து வடிகட்டிப் பயன்படுத்துவதே இஞ்சிச் சாறும். உணவு செரிமானம் ஆகாமல் ஏற்படும் வயிற்றுப்போக்குக்கு இஞ்சிச் சாற்றை வயிற்றின் தொப்புள் பகுதியை சுற்றித் தடவி வர குணமாகும்.இஞ்சிச் சாறும், வெங்காயச் சாறும் சம அளவு கலந்து குடித்தால், வாந்தி, குமட்டல் இவற்றை நிறுத்தலாம்.


இருமல் குணமாகும்


இஞ்சிச் சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் சம அளவு கலந்து, வேளைக்கு 30 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால், இருமல் விரைவில் குணமாகும்.


உடல் வலிமைக்கு இஞ்சி-தேன் ஒரு காயகற்பம்


இஞ்சியை கீற்றுக்களாக நறுக்கி, தேனில் ஊறவைத்து நாள்தோறும் காலையில் 4 துண்டு மாலை 4 துண்டு சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும். இளமை தோற்றம் கொடுக்கும்.


வயிற்று வலி, வாந்தி நீங்க இஞ்சி


இஞ்சிச் சாறு, தேன் இரண்டையும் சேர்த்து பாகு செய்து குங்குமப் பூ, ஏலக்காய், சாதிக்காய், கிராம்பு இவற்றை பொடி செய்து தூவி, கிளறி எடுத்து கண்ணாடி பாத்திரத்தில் வைத்துக்கொண்டு, தேவையானபோது 5 கிராம் எடுத்து சாப்பிட்டால் வயிற்று வலி, வாந்தி முதலியவை குணமடையும்.


உடல் நலம் காக்க 


இஞ்சிக் குடிநீர்இஞ்சி, திரிகடுகு (சுக்கு, மிளகு, திப்பிலி), ஏலம், அதிமதுரம், சீரகம், சந்தனப்பொடி ஆகியவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் எல்லாவற்றிலும் வகைக்கு சமஎடை அளவு வாங்கி, அரைத்து கலந்து வைத்துக்கொள்ளவும். வேண்டும்போது, ஒரு ஸ்பூன் பொடியை நீரில் கலக்கி சுண்டக் காய்ச்சவும். பின்பு காலை - மதியம் - மாலை 50 மில்லி அளவு வேளைக்கு ஒருமுறை சாப்பிட பித்தம் நீங்கும். உடல் சுறுசுறுப்படையும்.


தலைவலிக்கு இஞ்சி


மூக்கில், ஓரிரு சொட்டுகள் இஞ்சிச் சாறு விட்டால் தலைவலி குணமாகிவிடும்.


பல்வலிக்கு இஞ்சி


இஞ்சித் துண்டை பல்வலி உள்ள இடத்தில் வைத்துத் தேய்த்தால் வலி மட்டுப்படும்



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement