Ad Code

Responsive Advertisement

Oh My God - விஜயகாந்த் மறைவு - ஷாக்கான ரஜினிகாந்த்

 



நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் மறைவு செய்தியை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாகர்கோயிலில் நடைபெற்று வந்த வேட்டையன் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு அஞ்சலி செலுத்த சென்னை புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இனிக்கும் இளமை படத்தின் மூலம் 1979ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் விஜயகாந்த். முதல் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதே ஆண்டில் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். விஜயராஜ் ஆக மதுரையில் பிறந்து வளர்ந்தவரை தமிழ் சினிமா சிவாஜி ராவை எப்படி ரஜினிகாந்த் என மாற்றியதோ அதே போல விஜயராஜை விஜயகாந்த் ஆக மாற்றி கொண்டாடியது.


விஜயகாந்த் உடன் நல்ல நட்பை பாராட்டி வந்த ரஜினிகாந்த் அவரது உடல்நலம் சீராக வேண்டும் என கடந்த மாதம் மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்த போது பிரார்த்தனை செய்து பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், விஜயகாந்தின் மறைவு செய்தி கேட்டு ரஜினிகாந்த் சென்னைக்கு புறப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


சினிமாவில் தான் மோதல்: 


ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு சினிமாவில் மட்டுமே ஆரோக்கியமான போட்டி நிலவியது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உச்ச நட்சத்திரங்களாக இருந்த காலக்கட்டத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விஜயகாந்தின் மார்க்கெட்டை அந்த இரு பெரும் நட்சத்திரங்களுக்கு இணையாக உயர்த்தியது. புலன் விசாரணை, சின்னக் கவுண்டர், வல்லரசு, வானத்தை போல, ரமணா உள்ளிட்ட பல படங்கள் விஜயகாந்துக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து முன்னணி நடிகராக மாற்றியது.


பிரபலங்களுக்கு மரியாதை: 


73 வயதிலும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மறைவு செய்தியை அறிந்தால் தனது உடல் நலத்தை எல்லாம் கவலைப்படாமல் ஓடோடி வந்து இறுதி மரியாதை செய்யும் நல்ல மனம் படைத்தவராக ரஜினிகாந்த் இருப்பதை பார்த்து இளம் நடிகர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement