Ad Code

Responsive Advertisement

இந்தியாவில் தங்கம் விற்பனை முற்றிலும் ஸ்தம்பிப்பு!

 



கடந்த மாதம் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சில நாட்களுக்கு தங்கத்தின் தேவை நன்றாக இருந்த நிலையில் தற்போதிய விலை உயர்வு சந்தையை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது என்று புதுதில்லியைச் சேர்ந்த தங்க வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


விலை உயர்வால் இந்தியாவில் உள்ள தங்க நகை வியாபாரிகள் இந்த வாரம் கடுமையான தள்ளுபடிகளை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில் பண்டிகைக்குப் பிந்தைய தேவை முற்றிலும் ஸ்தம்பித்த நிலையில் உள்நாட்டிலும், ஆசியவிலும் அதன் தேவை வெகுவாக பாதித்தது.


இந்தியாவில் தங்க நகை வியாபாரிகள் உள்நாட்டில் நிலவும் விலைகளை விட அவுன்ஸ் ஒன்றுக்கு 9 டாலர் வரை தள்ளுபடி வழங்கிய நிலையில், 15 சதவிகிதம் இறக்குமதி மற்றும் 3 சதவிகிதம் விற்பனை வரிகள் உள்பட கடந்த வார தள்ளுபடியான 6 டாலரிலிருந்து தற்போது இது அதிகரித்தது.


இந்தியாவில் தங்கத்தின் விலை இந்த வாரம் 10 கிராமுக்கு 62,675 ரூபாயைத் தொட்டுள்ள நிலையில் இது இரண்டு மாதங்களில் சுமார் 11 சதவிகிதம் உயர்ந்துள்ளது. திடீர் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் தவித்து வரும் நிலையில் தங்கத்தின் விலை இதே நிலையில் நீடிக்குமா என்பதைப் அறிந்து கொள்ள வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர் என்று மும்பையைச் சேர்ந்த தங்க இறக்குமதி செய்யும் வங்கியின் வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement