திடீர் உடல் நலக் குறைவு காரணமாக, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மகன் தயாநிதி, 36, சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சென்னையில் வசித்து வரும் அவர், நேற்று முன்தினம், வீட்டில் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அவரை, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு, அவருக்கு மூளை ரத்த நாளத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி, தீவிர சிகிச்சை பெற வேண்டும் என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மருத்துவமனை சென்று தயாநிதியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்தார். டாக்டர்கள் மற்றும் அழகிரி குடும்பத்தினரிடம், தயாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்
0 Comments