வாரணாசி சென்ற மோடி, தனது கான்வாயை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழிவிடச் செய்தார். இதற்காக அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி, தனது தொகுதியான வாரணாசிக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ளார். வாரணாசி மற்றும் பூர்வாஞ்சல் பகுதிகளில் 19 ஆயிரம் கோடி மதிப்பிலான 37 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் மற்றும் முடிவடைந்த திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார்.
மேலும் காசி தமிழ்சங்கமம் 2.0 நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் அவர், கன்னியாகுமரியில் இருந்து வாரணாசி வரையிலான ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
வாரணாசியில் பிரதமர் மோடி காரில் சாலை மார்க்கமாக சென்றார். தொண்டர்கள் ஒன்று கூடி மோடிக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது, கான்வாய்க்கு பின்னால், ஒரு ஆம்புலன்ஸ் வந்தது.
இதனை கவனித்த மோடி, தனது கான்வாயை நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழி விடும்படி கூறினார். இதனால் அனைத்து வாகனங்களும் சாலை ஓரம் ஒதுங்கவே, ஆம்புலன்ஸ் அங்கிருந்து சென்றது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக, அனைத்து நெட்டிசன்களும் பிரதமரை பாராட்டி வருகின்றனர்.
0 Comments