சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த டிச.,18 வரை அவகாசம் வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மின் கட்டணம் செலுத்துவதற்கு நாளை உடன் அவகாசம் முடிவடைய இருந்தது. ஆனால், புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இன்னும் முழு அளவில் இயல்பு நிலை திரும்பவில்லை. இதனையடுத்து, இந்த 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்த 4 மாவட்டங்களிலும் மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை டிச.,18 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும் அவர் வரும் 18 ம் தேதி வரை அபராதம் இன்றி மின் கட்டணத்தை செலுத்தலாம் என அறிவித்துள்ளார்.
0 Comments