தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் இன்று (நவ., 24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
நேற்று (நவ.,23) தென்மாவட்டங்களில் கனமழை கொட்டியது.
இந்நிலையில் தமிழகத்தின் தேனி, கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, நீலகிரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வட மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னை மற்றும் சுற்றவட்டார பகுதிகளிலும் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குன்னூர், கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
0 Comments